Friday, December 24, 2010

Just be yourself guys...

வெகு நாட்களாக இந்த தளத்தில் தமிழ் எழுத்துகளை பார்க்க வேண்டும் என போலவே இருந்தது. அது தான் இந்த தமிழ் பதிப்பு. இது நான் தமிழில் எழுதும் (தட்டும்) இரண்டாவது பதிப்பு. முதலாவது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. இப்பொழுது எந்த எண்ணமும் இல்லாமல் தட்ட தொடங்கி விட்டேன்.

திடீரென்ற இந்த தமிழ் பற்று எனக்குள் மீண்டும் வருவதற்கு காரணம் பல விஷயங்கள், சில மனிதர்கள். எப்போதும் எனக்குள் இருக்கும் அந்த தமிழ் பற்றுக்கு காரணம் மூவர். முதல் நபர் இறந்தும் இறக்காமல் இருக்கும் மகாகவி சுப்ரமணிய பாரதி, இரண்டாவது, என்றும் இளமையாக இருக்கும் கவிஞர் வாலி. மூன்றாவது, எப்பொழுதும் புதிதாக முயற்சி எடுக்கும் கலைஞானி கமல்ஹாசன். கமலின் புதிய கவிதை ஒன்றே இந்த பதிப்பிற்கு தூண்டுதல் என்றால், அதில் ஆச்சிரியம் இல்லை.

ராவணனின் பத்து தலைகளும் பத்து விதமாக யோசிப்பது போல என் ஒரு தலை ஒரே நேரத்தில் யோசிக்கிறது. சில நேரங்களில் ராகங்கள் கூட பாடுகின்றன. ஒரு தலை ராகம்...! ராகம் உண்டாகும் பொழுதினிலும் கர்நாடகத்தில் தொடங்கி,ஹிந்துஸ்தானி மற்றும் மேல்நாட்டு மெட்டுகளுக்கு செல்கிறது. மண்டைக்குள் ஒரு ஜுகல் பந்தியே நடக்கிறது!

Nelly Furtado (Furtado என்று தமிழில் தட்டினால் கிட்ட தட்ட பரோட்டா என்று காட்டுகிறது Google Transliteration), Katy Perry போன்ற பெண்மணிகள் பட்டை கிளப்புகின்றனர். ஒரு பெண்ணின் ஆழ் மனதில் இருக்கும் உணர்சிகளை இப்பெண்மணிகள் பாடுகின்றனர். நமது கமல்ஹாசனும் அதையே பாடுகிறார்.

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய் கழுதை கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்

குழந்தை வாயை முகர்வது போல

கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காம கழிவுகள் கழுவும் வேளையில்
கூட நின்றவன் உதவிட வேண்டும்

சமையலின் போதும் உதவிட வேண்டும்
சாய்ந்து நெகிழ்ந்திட திண்தோள் வேண்டும்

மோதி கோபம் தீர்க்க வசதியாய்
பாறை பதத்தில் நெஞ்சும் வேண்டும்

அதற்கு பின்னால் துடிக்கும் இதயமும்
அது இரத்தம் பாய்ச்சி நெகுழ்திய சிந்தையும்
மூளை மடிப்புகள் அதிகம் உள்ள
மேதாவிலாச மண்டையும் வேண்டும்

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கி புழங்கிட பணமும் வேண்டும்
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும்
எனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில்
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும்

இந்த தமிழ் எனக்கு பிடித்திருக்கிறது...!ஒரு பெண் எழுதியது போலவே இருக்கின்றது இந்த கவிதை! எப்படி ஒரு பெண்ணாக இருந்து யோசித்திருப்பார் என்று யோசித்ததுண்டு. அந்த நேரத்தில் தான் ஒரு பழைய ஞாபகம் நினைவிற்கு வந்தது....

(ஆங்கிலத்தில் தொடறலாம் என நினைகின்றேன். எனக்கே இது கொஞ்சம் அதிகமாக தெரிகிறது... உங்கள பாத்தா எனக்கு பாவமா இருக்கு...)

While reading Kamal's lyrics I got reminded about Paulo Coelho's book Eleven Minutes. Its a novel on how Maria becomes a sex worker. Almost the entire book narrates the rumblings in Maria's mind. "I’m the one who should feel ashamed for being unable to arouse them, but, no, they always blame themselves" writes the author on behalf of Maria. Do read the book.

Here both the writers have written on the same plane. Feminism. When a female writes the same way either the book is banned or the writer is issued a fatwa! On the other hand, men have been better in expressing the feminism thinking inside them. And it doesnt mean they think like a lady.

There is this "Man" thing attached to men all the time. For ex: when women cry it is considered they are innocent and a man cries its considered he is weak, immature. Crying is a natural feeling of expressing depression without words. What is it to do with a male / female thing...! (The best is how girls perceive it...when you /me cry its that we are those weak poor individuals and they get moved when Shahrukh / Salman cries on screen...they are considered Macho)

This crying thing is just an example. A man is put an artificial pressure for the whole life surrounded the "act like a male" tag. Tony Porter explores this with reference to his own life. He shows how this mentality drummed into so many men and boys can lead to disrespect, mistreat, abuse women and each other. And his solution to this is break free the "man box". Check out what he has explored. Video Courtesy: TED


Just be yourself guys... When you feel to hit, hit it hard.