Saturday, August 11, 2007

Shortcut to the Foreign Land!

pls view the post in IE6+. or else it will appear as like another version of tamil ;))

எனக்கொரு நண்பன் உண்டு. காலேஜ்'ல படிக்கும் போது எப்பொழுதும் US போகவேண்டுமென்றே பேசிக்கிட்டு இருப்பான். அவனோட வெறியை பார்த்து நான் வியந்ததுண்டு. இப்போ என்ன கதை தெரியுமா? அவன், காலேஜ் நிறைவான பிறகு ஒரு வேலைக்கு போக ஆரம்பித்து இங்கேயே தான் இருக்கான். நாலு வருஷம் ஆச்சு; உன்னுடைய US ப்ளான் என்னாச்சு'னு கேட்டா, ஒரு feelings'உடன்,"அதெல்லாம் ஒரு கனவா போச்சுடா!" அப்படினு சொல்றான். இப்போ யாராவது ஆஃபர் செய்தாலும் அவன் போக மாட்டான். அங்கே சம்பாதிக்கும் காசை இங்கேயே சம்பாதிக்கிறான். என்னுடைய மற்ற நண்பர்கள் சிலருக்கும் வெளிநாடு போக வேண்டும் என்ற மோகம் இருக்கு. ஆனால் ஏகப்பட்ட யோசனைகள் அவர்களுக்குள்...அப்பா, அம்மா, நண்பர்கள், காதலி, figure என ஏக மக்களையும் விட்டுவிட்டு போகவேண்டுமா என்று! அப்படியே போகலாம் என்று முடிவெடுத்தாலும் குறைந்த பட்சம் ஒரு வருஷத்திற்கு முன்னதாகவே ஏற்பாடுகள் ஆரம்பிக்க வேண்டும்.

என்னுடைய தோழி ஒருத்தி, பத்து மாதத்திற்கு முன்னால் கல்யாணம் ஆகி அவள் இப்போது US'ல் இருக்கிறாள். ரொம்ப நல்ல விஷயம். அவள் செல்வதிற்கு முன்னால் ஒரு e-mail எழுதியிருந்தாள். அது என்னவென்றால், அவளுடைய கணவர் onsite project'ற்காக வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அதனால் நானும் செல்கிறேன் என்று... இது போன்று பல பெண்கள் எழுதுகிறார்கள். இன்னும் எழுதுவார்கள். looks like marrying a guy working in a software company is a shortcut to go abroad for girls. அதுவும், வேலை செய்யும் office'இல் onsite option இருக்க வேண்டும் என்ற condition வேறு! பெண்கள் எல்லோரும் மிக தெளிவாகத்தான் இருக்கிறார்கள். working in a software company has become a mandotary requirement for the girl to choose the boy . இதுக்கு பெயர் fashion'ஆம்!! "நான் திருமணம் செய்து கொள்ளப்போகும் பையன் வெளிநாட்டில் இருக்கிறார், நான் வெளிநாட்டில் settle'ஆக போகிறேன்", என்று சொல்லிக்கொள்வதில் பெண்களுக்கு ஒரு சிறிய சந்தோஷம். அவர்களுடைய அந்த சிறிய சந்தோஷமே தம்முடைய பெரிய சந்தோஷமாக கருதுகிறார்கள் நமது வருதத்திற்குறிய ஆண்கள். என்ன கொடுமை Sir இது!!

We people have to overcome the lure of foreign lands. We should invest our brains in our country. Looking for exciting opportunities abroad is rather paradoxical - அப்படீனு சொல்றார் ஒரு NRI. அவர் ஒரு சாதாரண NRI அல்ல. He is one of the world's leading millionaire.

மக்களே! நாம் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடுவதே நம்முடைய வாடிக்கையாக ஆகிவிட்டது. பலர் அதில் சிக்கி மிகவும் வருந்தியிருக்கிறார்கள். நாமாவது அதை புரிந்து கொண்டு உஷாராக இருப்போம். பெண்களே, உங்களுக்கு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. எதற்கு வீணாக எதையாவது சொல்லிவிட்டு மாட்டிக் கொள்ள வேண்டும் என்ற பயமும் தான்!

ஆனால் நண்பர்களே, யாராவது அழைத்தாலும், ஒரு சபலத்தில் கூட ஒப்புக்கொள்ள இயலாதபடி, பலர் சொல்லியும் இவ்வளவு நாள் passport apply செய்யாமல் இருந்தேன். இப்போது செய்துவிட்டேன்...அதற்காக பெண்கள் உஷார் ஆக வேண்டாம். நான் எப்போதும் local தான். இந்தியாவில் எந்த மூலைக்கும் செல்வேன் வேலை செய்ய..ஆனால் வெளிநாடு என்று வந்தால், சுற்றி பார்ப்பதற்காக மட்டுமே செல்வேன்!!

6 comments:

Deepa said...

ரொம்பவும் அருமையா எழுதியிருக்கீங்க
ஒரு காலத்திலே வெளினாட்டு மோகம் இருந்தது ( தலைவிரித்தாடியது) உண்மைதான்... மறுக்கலை... ஆனால்.. கடந்த 5-8 வருஷமா... அப்படி இல்லை.. பொரியியல் மற்றும் வேறு கல்லூரியிலிருந்து வரும் மாணாவர்கள்... "வெளிநாட்டில்-வேலை" ன்னு தேடுவதில் நேரத்தை விரயம் செய்யாமல்.. இங்கேயே இருக்கிரார்கள்.. திறமையும் வளார்த்து கோள்கிரார்கள்... வெளிநார்ரவரை விக்கவும் வைக்கிரார்கள்

இது பெண்களுக்கும் (அவரை பெற்றவர்களுக்கும்) பொருதும்.. இப்பெல்லாம் யாரும் "பாரீநன் மாப்பிள்ளை" தேடுவதில்லை... நம்புங்கள்... இது கதையல்ல -- நிஜம்

R R R said...

நன்றிகள் பல நூறு... சமீபத்தில் என் தோழி ஒருவள் எழுதிய மின் அஞ்சலே இதை எழுதுவதற்கு தூண்டுதலாக இருந்தது...

உண்மையை நம்ப முடியவில்லை!! ;)

Deepa said...

truth is stranger than fictionன்னு சும்மாவா சொன்னாங்க..;)

R R R said...

தீபா சொல்லும் உண்மை கற்பனை போன்றுதான் இருக்கிறது. என்ன செய்ய... :-?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

I can understand your (patriotic)feelings Rajaram. However, life is to live.
I prefer to live in US. And I am still trying my level best to get settled there.
I think it is upto an individual to dream and work towards achieving his/her dreams. I like your blog. However, I feel, you can write something about 'what is better in India, when compared to US'... I am pretty sure you won't have much points in your bag.
of course, I love India. However, people prefer foreign countries, why?
US, AUSTRALIA & EUROPEAN countries are very well developed when compared to ours. I got this life... my one life. Why don't I go out there and enjoy, rather than stay here and keep dreaming that one day India would become a WELL-DEVELOPED nation-and-I would be a part of it...
It is going to happen. But, may be in another 50-60 years. At that time, I might not be able to enjoy the riches, facilities, etc...
Moreover, think about what the above-said countries would have become in the next 5/6 decades. Let's face it... We are lagging behind...
To sum up with, I prefer to enjoy my life... So, my vote would be to fly across. Furthermore, people who travel a lot and work in foreign nations will have a better idea to develop our nation (if they wish to return).
Guys/Girs, please note that I am neither sarcastic nor cynical. I love India. But I care about me and my family more...
Please feel free to correct me if I am wrong...
Jai Hind... :)